ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் விலகியுள்ளார்.
கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச மீதான அதிருப்தியின் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
மடுல்சீமையில் இன்று இடம்பெற்ற கூட்டத்துக்கு வருவதாக சஜித் பிரேமதாச உறுதியளித்திருந்தும் பின்னர் சுகயீனம் காரணமாக வரமுடியாதென வடிவேல் சுரேஷிடம் கூறியுள்ளார்.
என்றாலும் வெலிமடையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் அவர் கலந்துகொண்டுள்ளனர். இதனால அதிருப்தியுற்ற வடிவேல் சுரேஷ் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
N.S