நவீன் இடத்தில் சாகல! ரணில் எடுத்த அதிரடி முடிவு ! -கட்சிக்குள் பல மாற்றங்கள் -ஐ. தே. க 

0
161

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்கவை நியமிக்க கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

தலைவரின் பிரேரணைக்கு கட்சி நிர்வாக குழு ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், அடுத்த செயற்குழு கூட்டத்தில் அது அங்கீகரிக்கப்படும் எனவும் கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

சாகல ரத்நாயக்க தற்போது சிரேஷ்ட உப தவிசாளராக உள்ளார்.

முன்னாள் தேசிய அமைப்பாளராக இருந்த நவீன் திசாநாயக்க பதவி விலகியதையடுத்து ஒரு வருடத்திற்கும் மேலாக இப்பதவி வெற்றிடமாக உள்ளது.

கட்சியின் தலைமைத்துவம் இளைஞர்களுக்கு வழங்கப்படும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்த நிலையில், அதன் பிரகாரம் ருவான் விஜேவர்தன பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டார். எவ்வாறாயினும், விக்கிரமசிங்க இன்னும் கட்சியை வழிநடத்திச் செல்வதோடு, பதவி விலக மறுத்து வருகிறார்.

இதனால் அக்கட்சியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட தலைவர்கள் மீது அவ்வப்போது விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

அண்மையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் அநுராதபுரம் மாவட்டத் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க, கட்சித் தலைமையை விமர்சித்ததுடன், கட்சியின் மறுசீரமைப்பிற்கு மூத்தவர்களிடமிருந்து போதிய ஆதரவை பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன பெறவில்லை எனத் தெரிவித்தார்.

இந்த விமர்சனங்களினால் அனுராதநாயக்கவை செயற்குழுவில் இருந்து இடைநிறுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here