மாகாண சபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்த வேண்டும்

Date:

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் நடத்தவுள்ளோம். உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்புத் திகதியை நிர்ணயிக்க முடியும் என இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் புதிதாக வேட்புமனுக்களைக் கோரவுள்ளதால் ஆரம்பத்தில் இருந்து தேர்தலுக்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும். தேர்தல் பணிகளுக்குத் தேவையான நிதி திறைசேரியால் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே, நிதி நெருக்கடி ஏதும் ஏற்படாது.

உள்ளூராட்சி அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு தற்போது அவை விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு திகதியை நிர்ணயிக்க முடியும்.

வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்கும், தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வதற்கும் போதுமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். ஆகவே, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ( விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன் உறுதியான தீர்மானத்தை எடுக்க முடியும்.

மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் காணப்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காண வேண்டிய பொறுப்பு நாடாளுமன்றத்துக்கு உண்டு என்பதைத் தொடர்ச்சியாக வலியுறுத்தியுள்ளோம். தேர்தல் முறைமை தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுக்களில் கலப்புத் தேர்தல் முறைமை குறித்து பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம்.

காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். எதிர்வரும் காலங்களில் அரசியல் கட்சிகளுடன் மாகாண சபைத் தேர்தல் குறித்து பேச்சில் ஈடுபடவுள்ளோம். மாகாண சபைத் தேர்தல குறித்து சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

காணப்படும் சட்ட சிக்கலுக்குத் தீர்வு கண்டு மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும், நாடாளுமன்றத்துக்கும் உண்டு என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாட்டில் இன்றைய வானிலை நிலவரம்

இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மாகாணங்களிலும்...

7 கோடி ஊழல் விவகாரத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர்

கைது செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு...

கடற்படை முன்னாள் புலனாய்வு இயக்குநர் கைது

கடற்படையின் முன்னாள் புலனாய்வு இயக்குநரான ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் மொஹோட்டி...

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...