தமிழக மீனவர்கள் 14 பேர் கைது

Date:

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். 

ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் 470 படகுகளில் சனிக்கிழமை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவர்கள் அனைவரும் வடக்கு மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தாகக் கூறப்படுகிறது. 

அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 14 பேரை கைது செய்தனர். 

தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஜான் போஸ் என்பவருக்குச் சொந்தமான முதல் படகில் ராமேஸ்வரம் மற்றும் பாம்பனைச் சேர்ந்த 11 பேர் கொண்ட குழுவினர் இருந்தனர்.

தங்கச்சிமடத்தைச் சேர்ந்த எஸ்.சுதன் என்பவருக்குச் சொந்தமான இரண்டாவது படகில் அதே கிராமத்தைச் சேர்ந்த 3 பேர் இருந்தனர். அதோடு மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் மேல் விசாரணைக்காக மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

இதனிடையே மீனவர் கைது செய்யப்பட்டதற்கு ராமேஸ்வரம் மீனவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.(தினமணி )

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது என...

பரீட்சை திகதி அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்குரிய தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம்...

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்…!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார்...

சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில்...