Tuesday, May 7, 2024

Latest Posts

துருக்கி, சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியது

துருக்கி- சிரியா எல்லையோர நகரங்களில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் அதிகாலை ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் உறக்கொண்டிருந்த நேரத்தில் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதில் பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதையடுத்து மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான சடலங்கள் மீட்கப்படுகின்றன.

இன்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்த நிலையில், அதன்பின்னர் 2000-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் பலியானோர் எண்ணிக்கை 22,765 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இன்று 6 நபர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.

கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. கடும் குளிர் மற்றும் சேதமடைந்த சாலைகள் போன்ற காரணங்களால் மீட்புப் பணி கடும் சவாலாக உள்ளது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை எளிதில் வழங்குவதற்காக சிரியாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தி உள்ளது. கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு சர்வதேச உதவிகளை வழங்குவதற்கு சிரியா அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.