அலி சப்ரி ரஹீம் பயணித்த சொகுசு ஜீப் விபத்து

0
130

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த சொகுசு ஜீப் இன்று (13) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 01.00 மணியளவில் புத்தளம் – அநுராதபுரம் வீதியின் 15 ஆம் மைல் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த ஜீப் புத்தளத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த போது அதே திசையில் பயணித்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் உழவு இயந்திரத்தை செலுத்திய நபர் காயமடைந்துள்ளார்.

புளியங்குளம், அளுத்கம பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினரின் ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சாலியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக 2022 ஆம் ஆண்டில், இந்த எம்.பி பயணித்த கார் மோதியதில் ஒருவர் இறந்தார். இது பாலாவியா – கல்பிட்டி வீதியில் மாம்புரியா பகுதியில் இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here