இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பான மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் இன்று(13) உயர் நீதிமன்றம் நிறைவுசெய்துள்ளதுடன், தீர்ப்பு அறிவிப்பது காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதிகள் காமினி அமரசேகர, குமுதினி விக்கிரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் மேன்முறையீடு விசாரணைக்கு வந்தது.
இராஜாங்க அமைச்சரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் பிரஜாவுரிமைக்கு எதிராக தாம் தாக்கல் செய்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட இரண்டு வாரங்களின் பின்னர் சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் மேன்முறையீடுகளை முன்வைத்திருந்தார்.