டயானா கமகே மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவு

Date:

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பான மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் இன்று(13) உயர் நீதிமன்றம் நிறைவுசெய்துள்ளதுடன், தீர்ப்பு அறிவிப்பது காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதிகள் காமினி அமரசேகர, குமுதினி விக்கிரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் மேன்முறையீடு விசாரணைக்கு வந்தது.

இராஜாங்க அமைச்சரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் பிரஜாவுரிமைக்கு எதிராக தாம் தாக்கல் செய்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட இரண்டு வாரங்களின் பின்னர் சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் மேன்முறையீடுகளை முன்வைத்திருந்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரணிலுகுக்கு எதிரான வழக்கு – விசாரணை புதன்கிழமை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு அடுத்ததாக...

2 மணிக்குப் பின்னர் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும்...

போதை பொருள் கடத்திய 22 தேரர்கள் கைது! 110 கோடி பெறுமதி “குஷ்” “ஹேஷ்” மீட்பு!

சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய "குஷ்" மற்றும் "ஹேஷ்"...

வெசாக் விடுமுறை, விசேட வர்த்தமானி

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம்...