அமைச்சர்கள் சிலர் பெயர் போட்டுக் கொள்ளும் நோக்கில் முன்னெடுக்கும் செயற்பாடுகளை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரும் மொட்டுக் கட்சி ஆதரவாளருமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
சுபீட்சத்திற்கான நோக்கு என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதியும் பெயர் போட்டுக் கொள்ளும் கொள்கையை பின்பற்றினால் அதுவே இறுதியான நிலையாக இருக்குமென முருத்தெட்டுவே தேரர் தெரிவித்துள்ளார்.
எனவே வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு ஜனாதிபதியிடம் ஆனந்த தேரர் வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் அநுராதபுரம் சல்காடு விளையாட்டரங்கில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் பேரணிக்கு வந்தவர்களை அரசாங்கத்தின் ஆதரவாளர்களாக கருதாமல் எதிர்ப்பாளர்களாகவே கருத வேண்டும் எனவும் ஆனந்த தேரர் மேலும் குறிப்பிடுகின்றார்.
மக்களுக்கு வாக்குறுதியளித்த சுபீட்சமான நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதிக்கு எஞ்சியிருக்கும் கால அவகாசம் போதுமானது எனவும் எனவே வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற ஜனாதிபதி தலையிட வேண்டுமெனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.