இன்றைய தினமும் மின்வெட்டு அமுலில்

Date:

இன்றும் (13) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. 

இந்த மின் விநியோகத் துண்டிப்பு ஒரு மணி நேரம் அமுல்படுத்தப்படும்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீர் மின் தடையைத் தொடர்ந்து, நுரைச்சோலை மின் நிலையத்தில் உள்ள 3 மின் உற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்ததால் மின்சாரத் தேவையை நிர்வகிக்க, இலங்கை மின்சார சபை 10 மற்றும் 11ஆம் திகதிகளில் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஒன்றரை மணி நேரம் மின் விநியோகத் துண்டிப்பை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்தது. 

அதன்படி, பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 6 மணி நேரத்திற்குள் 4 பிரிவுகளாக மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. 

இருப்பினும், நேற்று (12) பௌர்ணமி தினம் என்பதால், குறைந்த மின்சார தேவையை பூர்த்தி செய்ய முடிந்ததால், மின் விநியோத் துண்டிப்பை இலங்கை மின்சார சபை மேற்கொள்ளவில்லை. 

தற்போது, ​​நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கிகள் செயலிழந்துள்ள நிலையில், அதன் பராமரிப்புப் பணிகள் மின் பொறியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

குறித்த பணிகளை விரைவாக முடித்த பின்னர், மின்பிறப்பாக்கிகளை இயக்க நடவடிக்கை எடுப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 

பெரும்பாலும் நாளை (14) நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம், தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க வாய்ப்புள்ளதாக இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

திருகோணமலையில் ஒருவர் சுட்டுக் கொலை

திருகோணமலையில் நேற்று (01) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர்...

எரிபொருள் விலை திருத்தம் இல்லை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை...

ரம்புக்கனையில் மண்சரிவு

ரம்புக்கனை, கங்கைகும்பூர பகுதியில் இன்று (01) பாரிய மண்சரிவு ஒன்று பதிவாகியுள்ளதாக...

அனர்த்த மீட்பு உலங்குவானூர்தி விபத்து

அனர்த்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212...