இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது மலையக மக்களின் வீட்டு வசதி, கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் சுயதொழில் தொடர்பான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸினால் ஆரம்பிக்கப்பட்ட சமீபத்திய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த வேலைத்திட்டத்திற்கு ஆதரவு வழங்குவது குறித்து இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சாதகமாக பதிலளித்ததுடன், மேலும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா முழுமையாக ஆதரவு வழங்கும் என்றும் உறுதியளித்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமானுடன் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் எம்.ரமேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.