நாடு திரும்பினார் ஜனாதிபதி அனுர

0
242

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (13) காலை இலங்கையை வந்தடைந்தார்.

ஜனாதிபதி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்று, இன்று காலை 08.25 மணிக்கு எமிரேட்ஸ் விமானம் EK-650 மூலம் துபாயிலிருந்து திரும்பினார்.

பெப்ரவரி 10 ஆம் திகதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நாட்டை விட்டு வெளியேறினார்.

இந்த விஜயத்தின் போது, ​​ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க துபாயில் நடைபெற்ற 2025 உலக அரசாங்க உச்சி மாநாட்டில் உரையாற்றினார், மேலும் உலக அரசாங்க உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பல நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் அரசாங்கத் தலைவர்களுடன் ஜனாதிபதி இருதரப்பு கலந்துரையாடல்களையும் நடத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here