கிண்ணியா உப்பாறில் படகு கவிழ்ந்து இருவர் பலி

Date:

மகாவலி ஆறு கடலில் விழும் கிண்ணியா உப்பாறு களப்பில் இருவர் படகு கவிழ்ந்து உயிரிழந்த நிலையில் இன்று (14) சடலங்களாக மிட்கப்பட்டதாக கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிண்ணியா, பைசல் நகர் பகுதியைச் சேர்ந்த உதய் ரூபன் மற்றும் திருகோணமலை வாழையூட்டைச் சேர்ந்த புஷ்பா ராசா ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு ஈச்சந்தீவு பகுதியில் இருந்து உப்பாறு பகுதிக்கு படகில் சென்றவர்களை காணவில்லை என்று கிண்ணியா பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பேரில் உயிரிழந்த இருவரையும் தேடும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கிண்ணியா பொலிஸ் நிலையப் பிரதான பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.எச்.சி.கே.பெர்ணான்டோவின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே இந்த இரண்டு சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஹேலிஸ் தொடங்கும் பெரிய அளவிலான பல்பொருள் அங்காடி

இலங்கையின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான ஹேலிஸ் பிஎல்சி,...

வெலிகம பிரதேச சபை தலைவர் சுட்டுக் கொலை!

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபையின் தலைவர் மிதிகம லசா...

இறக்குமதி அரிசிகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை

இறக்குமதி செய்யப்படும் பல வகையான அரிசிகளுக்கு நேற்று (21) முதல் அதிகபட்ச...

காலநிலை மாற்றம் குறித்த அறிவிப்பு

வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகள் பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் கொந்தளிப்பு, சில...