இந்தியாவிடமிருந்து பெறப்படவுள்ள நிதியுதவி தொடர்பான இறுதி உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்காக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அடுத்த இரண்டு வாரங்களில் இந்தியாவிற்கு மீண்டுமொரு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள உள்ளார்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் இந்தியாவுக்குச் சென்று கலந்துரையாடினார். அந்தப் பேச்சுக்கள் இலங்கைக்கு மிகவும் பயனுள்ள முடிவுகளை அளித்தன. இந்தியாவிடமிருந்து 2.4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நிதியுதவியைப் பெறுவதற்க பசில் ராஜபக்ஷ அடத்தளம் இட்டார்.
இப்போது, முதலில், நாங்கள் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெறுகிறோம். உணவு, மருந்து போன்றவற்றைப் பெறுவதற்கு. இறுதி உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக பசில் ராஜபக்ச அடுத்த இரண்டு வாரங்களுக்குள் புதுடில்லி திரும்புவார் என நம்புகிறேன்.இவை அனைத்தும், நமது வெளியுறவுக் கொள்கையின் வெற்றி, இந்தப் பிரச்சினைகளைச் சமாளிப்பதில் நாம் தனியாக இருக்கிறோம் என்று அர்த்தமல்ல என அமைச்சர் ஜி. எல். அநுராதபுரத்தில் நேற்று (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்தார்.