அவசரமாக கூடும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

Date:

அக்குரேகொட துப்பாக்கிச் சூடு சம்பவத்தை முன்னிட்டு, இலங்கை சட்டத்தரணிகள் சங்க Bar Association of Sri Lanka (BASL) அனைத்து உறுப்பினர்களின் அவசர பொதுக்கூட்டம் நாளை (15) பிற்பகல் 3.00 மணிக்கு கொழும்பில் நடைபெறவுள்ளதாக BASL தலைவர் சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய Rajeev Amarasuriya தெரிவித்துள்ளார்.

இன்று (14) நடைபெற்ற விசேட ஊடகச் சந்திப்பில், அக்குரேகொட துப்பாக்கிச் சூடு சம்பவம் முழு சட்டத்தரணிகள் சமூகத்தையும் பாதிக்கும் விடயமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதுகுறித்த அடுத்த கட்ட நடவடிக்கையை நிர்வாக சபை மட்டும் தீர்மானிக்க முடியாது என்பதால், அனைத்து உறுப்பினர்களையும் இணைக்கும் அவசரக் கூட்டம் அழைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், 2012ஆம் ஆண்டில் அந்நாளைய தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்க Shirani Bandaranayake மீது நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட பதவி நீக்க (Impeachment) நடவடிக்கைக்குப் பின்னர் இதுவே இவ்வகை அவசர பொதுக்கூட்டம் முதன்முறையாக நடைபெறுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

BASL இன் அடுத்த கட்ட முடிவுகள் நாளைய கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜிந்துப்பிட்டியில் மீண்டும் ஒருவர் சுட்டுக் கொலை

கொழும்பு - ஜிந்துப்பிட்டிய பகுதியில் இன்று (14) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்...

ஏன் இந்த இராஜினாமா?

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்கள் கட்டாய பௌதீக ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல்...

ரணில் தொடர்பான B அறிக்கையின் சட்ட ஓட்டை அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன்...

தலங்கம – அக்குரேகொட துப்பாக்கிச் சூடு: 10 விசாரணைக் குழுக்கள் நியமனம்

தலங்கம, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற இரட்டை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக...