பாடசாலைகளுக்கு அரசியல்வாதிகளின் பெயர்களை வைப்பதை தவிர்க்க நடவடிக்கை

Date:

வாழும் அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு நபர்களின் பெயர்களை பாடசாலைகளில் இருந்து நீக்குமாறு அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.

நாளை (16) அனைத்து ஆளுநர்களையும் சந்தித்து இந்த முடிவை அறிவிக்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இனிமேல் உயிருடன் இருக்கும் எந்த ஒருவரின் பெயரையும் பாடசாலைகளுக்கு பெயர் வைக்க பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை பழைய மாணவர் சங்கங்களின் வேண்டுகோளுக்கு இணங்க, கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு நபர்கள் உயிருடன் இருக்கும் போதே பாடசாலைகளுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, உதவி வழங்குகிறோம் என்ற போர்வையில் அரசியல்வாதிகள் பாடசாலைகளுக்குச் சென்று அரசியல் பேச்சுக்களை நடத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரகித, சரித் இருவரும் ஜூலை 3ம் திகதி வரை விளக்கமறியலில்

பாதாள உலக தலைவன் "ஹரக் கடாவிற்கு" வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, அவரது...

கொழும்பில் இரு முக்கிய புள்ளிகள் கைது

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ மற்றும்...

வெனிசுவேலா நிலநடுக்கம் – பலர் பலி

வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸில் சில வினாடிகள் இடைவெளியில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள்...

அஸ்வெசும நலத்திட்டத்தில் மாற்றம்

இனி வரும் காலங்களில் அஸ்வெசும நலத்திட்டத்தின் மூலமான உதவித்தொகை, ஏழை மற்றும்...