18 சுகாதார தொழிற்சங்கங்களின் சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிட தீர்மானம் .

0
180

18 சுகாதார தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை காலை 8 மணி தொடக்கம் 14 நாட்களுக்கு தமது வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழில் நிபுணர்கள் அமைப்பின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சருடன் நேற்றிரவு இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்வதா இல்லையா என்பது குறித்த தீர்மானம் இன்று மாலை எடுக்கப்படும் என சுகாதார தொழில் நிபுணர்கள் அமைப்பின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here