20 மீனவர்கள் பிணையில் விடுதலை, மூவருக்கு சிறை

0
63
File Photo
File Photo

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி, மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டைப் பெற்று, சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர்.

அதனைத் தொடர்ந்து, மீனவர்கள் காங்கேசன் கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அப்பகுதிக்கு திடீரென வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி 2 படகுகளையும், அதில் இருந்த 23 மீனவர்களையும் கைது செய்து சென்று சிறையில் அடைத்தனர்.

தற்போது, சிறையில் இருந்த மீனவர்களின் நீதிமன்றக் காவல் முடிந்த நிலையில், அனைவரையும் இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது மீனவர்களிடம் நீதிமன்றம் நடத்திய விசாரணை முடிவில், 20 மீனவர்களை மட்டும் நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து, ஏற்கனவே கைது செய்யப்பட்ட மீனவர், 2வது முறையாக எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதால், 1 வருடம் சிறை தண்டனையும், 2 விசைப்படகு ஓட்டுநருக்கும் தலா 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து, படகுகள் இரண்டும் அரசுடமையாக்கப்பட்டது எனவும் உத்தரவிட்டது.

அதுமட்டுமின்றி, இனிவரும் காலங்களிலும் எல்லை தாண்டி மீன்பிடிப்பில் ஈடுபடும் படகின் ஓட்டுநருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என கடுமையாக எச்சரிக்கை விடுத்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், விடுதலை செய்யப்பட்ட 20 ராமேஸ்வர மீனவர்களும், இன்னும் ஓரிரு தினங்களில் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here