எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தயாராகி வருவதுடன், அதற்கான முன்மொழிவுகள் நிதி அமைச்சு மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
விலை உயர்வு இல்லாமல் நிறுவனத்தை நடத்த முடியாது என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கூறுகிறது.
எவ்வாறாயினும், எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை.
நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போதிலும் விலை உயர்வு தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.
இந்நிலைமை காரணமாக விலை அதிகரிக்கப்படாவிட்டால் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அப்படியானால், மின் உற்பத்தி நிலையங்கள், ரயில்கள், பயணிகள் பேருந்துகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும்.
சாதாரண நாட்டு மக்களின் அன்றாடத் தேவைக்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது.