காமினி ஜயவிக்ரம பெரேரா காலமானார்

0
53

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா இன்று (17) காலை காலமானார்.

சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் இறக்கும் போது 83 வயதாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து குருநாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அரசியலில் பிரவேசித்த அவர் நீர்ப்பாசனம் மற்றும் நீர் முகாமைத்துவம், உணவு பாதுகாப்பு, நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு மற்றும் புத்தசாசன அமைச்சராக பதவி வகித்தார்.

சில காலம் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பதவியையும் வகித்துள்ளார்.

அவரின் பூதவுடல் குருநாகல், கட்டுகம்பலாவில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளதுடன், இறுதிக் கிரியைகள் குறித்து குடும்பத்தினர் அறிவிக்கவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here