இன்று முதல் மீண்டும் மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இரண்டு நிலைகளில் 1 மணிநேரம் 45 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
பிற்பகல் 2.30 மணி தொடக்கம் 6.30 மணி வரை ஒரு மணித்தியாலம் மின்சாரம் தடைப்படும் என்றும் மாலை 6.30 மணி முதல் இரவு 10 மணி வரை 45 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பற்றாக்குறையால் தேசிய மின்கட்டமைப்பு சுமார் 500 மெகாவாட் மின்சாரத்தை இழந்துள்ளது.
எவ்வாறாயினும், எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் மின்வெட்டு இருக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.