அரசாங்கத்தின் சதிக்கு எதிராக எதிர்கட்சிகள் வகுத்துள்ள மூன்று திட்டங்கள்

0
134

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பலதரப்பட்ட நடவடிக்கைகளை எடுக்க எதிர்க்கட்சிகளின் அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

அதன்படி, மூன்று கட்டங்களாக நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சட்ட நடவடிக்கை, நாடு முழுவதும் பாரிய போராட்டங்கள் மற்றும் இராஜதந்திர நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்ட நடவடிக்கைகளின் கீழ், நிதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் அரசாங்க அச்சக அதிகாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்ட நடவடிக்கைகளின் கீழ் நாடளாவிய ரீதியில் இடைவிடாது தொடர் போராட்டங்களை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராஜதந்திர நடவடிக்கைகளின் கீழ், ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் பேரவைக்கு அறிவிக்கப்பட உள்ளது.

மக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்பதற்கு அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் தேசிய மக்கள் படையின் நிறைவேற்றுக்குழு உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஆரம்ப கட்டமாக கம்பஹா, மஹரகம மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் நேற்று (18) பாரிய ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதாகவும், அது எதிர்காலத்தில் நாடு முழுவதும் நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தீராத போராட்டம் எனவும், எதிர்காலத்தில் பெருந்தொகையான மக்கள் கொழும்பிற்கு வரவழைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்த அவர், இதில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அழைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here