சிவனொளிபாதமலை யாத்திரை செய்துவிட்டு பயணிகள் திரும்பிய பேருந்து விபத்துக்கு உள்ளானதில் அதில் பயணம் செய்த இருவர் பலியாகியுள்ளதுடன் 28 பேர் கடும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று (19) இரவு சுமார் 9 மணியளவில் நோர்ட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நோர்ட்டன் தியகல பிரதான வீதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த தனியார் பேருந்து ரத்மலானா பகுதியிலிருந்து சிவனொளிபாதமலை தரிசித்து விட்டு திரும்பி சென்றுகொண்டிருந்த போது பாதாளத்தில் பாய்ந்து விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் விபத்து ஏற்படும் போது பஸ்ஸில் 28 பேர் இருந்துள்ளதாகவும் அதில் இரண்டு பெண்கள் பலியானதாகவும் 26 பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகி கினிகத்தேனை வட்டவளை நாவலபிட்டி,கண்டி ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்களை பொலிஸார் இராணும் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வீதி வளைவுகள் நிறைந்த குறுகிய வீதி என்பதனால் சாரதிகள் மிகவும் எச்சரிக்கையாக தங்களது வாகனங்களை செலுத்த தவறுகின்றமையினாலேயே விபத்து ஏற்பட காரணமாக அமைவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்ட்டன் பிரிஜ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
N.S