சஜித்தை ஜனாதிபதி ஆக்கும் களத்தில் ஜீ.எல்.பீரிஸ்

0
142

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தீர்மானித்துள்ளார்.

பேராசிரியர் ஜி.எல். பீரிஸைத் தவிர சுதந்திர ஜனதா சபையின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கவுள்ளனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக புதிய வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவொன்று தற்போது பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட்டு வருகின்றது.

ஆனால் சுதந்திர மக்கள் பேரவையின் தலைவரான டலஸ் அழகப்பெரும எம்.பி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பார் என்பதை இதுவரை அறிவிக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here