இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பும் நிதி உதவியும்

0
133

இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு நாடு திரும்பி வேலைவாய்ப்புகள் இல்லாது சிரமப்படும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

குறித்த பட்டதாரிகள் ஆளுநர் செயலகத்தில் ஆளுரை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்துள்ள இந்த மாணவர்கள் அரசாங்க வேலை கிடைப்பதில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இவர்களது ஆவணங்களை Offer அமைப்பின் உதவியுடன் ஒழுங்குபடுத்த ஆலோசனைகளை ஆளுநர் வழங்கியுள்ளதுடன், இவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் தலா 50000 ரூபா நிதி ஒதுக்கீடு செய்யவும் ஆளுநர் ஏற்பாடு செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here