”எம் கண்ணீருக்கு காரணமானவர்கள் அழிந்துபோக வேண்டும்” – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

Date:

எமது பிள்ளைகளை காணாமற்போகச் செய்தவர்கள் அழிந்து போவார்கள் என்றும் நாடு கடத்தப்பட வேண்டும் என்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தேங்காய் உடைத்து வேண்டுதல் மேற்கொண்டனர்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற போராட்டத்தின் நிறைவிலேயே இவ்வாறு வேண்டுதலில் ஈடுபட்டனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது நீதி கோரிய போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்பாக ஆரம்பமானது.

தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 7 ஆண்டுகள் கடந்த நிலையில் நீதி கோரி கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி டிப்போச்சந்தி நோக்கி ஏ- 9 பிரதான வீதி ஊடாக பயணித்தது.

இப்போராட்டத்தில் மதத் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டதுடன், சிங்கள மக்களும் கலந்து கொண்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் மீது லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் புகார்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தனிப்பட்ட செயலாளர் சமீர கல்லாகே, ஒரு புகாரில்...

12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு

பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது...

அமரகீர்த்தி கொலை வழக்கின் தீர்ப்பு இன்று

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்...

மேலதிக வகுப்பு, கருத்தரங்க, செயலமர்வு நடத்த தடை

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை...