இலங்கையின் முன்னணி 20 நிறுவனங்களின் தலைவர்கள் நாளை (21) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்க உள்ளனர்.
இதன்படி, இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள், தலைவர்கள் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரிகள் ஜனாதிபதியை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது வர்த்தகர்களுக்கு தமது தேவைகளை நேரடியாக ஜனாதிபதியிடம் முன்வைத்து தமது பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கும்.
உண்மையில் தனியார் துறையே இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு. எந்தவொரு அரசாங்கமும் இந்த வணிக சமூகத்தை கைவிட முடியாது. யார் ஆட்சிக்கு வந்தாலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியை உயர்த்துவதற்கு இந்த வணிகர்களின் சக்தியைப் பயன்படுத்த வேண்டும்.
இதற்குத் தேவையான பின்னணி பி. பி. ஜயசுந்தர ஜனாதிபதி செயலாளராக இருந்த இரண்டு வருடங்களில் உருவாக்கப்படவில்லை.
எவ்வாறாயினும் ஜனாதிபதியின் புதிய செயலாளர் காமினி செனரத் தனது பதவியை பொறுப்பேற்று மிகக்குறுகிய காலத்திற்குள் இந்த வர்த்தக சமூகத்திற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேரடியான தொடர்பாடலுக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு பாராட்டுக்குரியவர்.