நிகழ்நிலை காப்பு சட்டமூலம் : சுமந்திரனின் மனுவை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் ஆட்சேபனை

Date:

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்திற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மனுவை விசாரணை செய்யாமலேயே நிராகரிக்க கோரி சட்டமா அதிபர் நேற்று (20) உச்ச நீதிமன்றில் ஆரம்ப ஆட்சேபனைகளை முன்வைத்தார்.

நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பான சட்டம் நாடாளுமன்றத்தில் முறையாக நிறைவேற்றப்படவில்லை என தீர்ப்பளிக்கக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரியந்த ஜயவர்தன, ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதேவேளை நிகழ்நிலை காப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் உறுதிப்படுத்தியுள்ளதை ஆட்சேபித்து நாடாளுமன்ற உறுப்பினர் அதிபர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கடந்த 16 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தாய்லாந்தில் கைதான முக்கிய புள்ளி

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு, தாய்லாந்தில் சமூக ஊடக ஆர்வலர்...

ஹொரணையில் ஒருவர் சுட்டுக் கொலை

ஹொரணை, 12 ஏக்கர்ஸ், சிரில்டன் வட்ட பகுதியில் நேற்று (02) இரவு...

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...

பத்மேவுடன் தொடர்பு – ஐந்து நடிகைகளுக்கு சிக்கல்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான கெஹெல்பததர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச்...