ஜனாதிபதி தேர்தலுக்கு பணம் செலவழிப்பது அநியாயம் – ராஜித

0
130

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கினால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு கோடிக்கணக்கான பணத்தை விரயம் செய்வது அநியாயம் என சமகி ஜன பலவேக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு உணவளிக்கக் கூட முடியாத நிலையில் தேர்தலை நடத்துவதற்கு முன்னுரிமை வழங்கக் கூடாது எனத் தெரிவித்த அவர், நாட்டின் நிதி நெருக்கடி காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அடுத்த தேர்தலில் அரசியல் ஆதாயங்களைப் பற்றி சிந்திக்காமல் நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும், நாட்டில் நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் அரசியல்வாதிகள் தமது தனிப்பட்ட கருத்துக்களை ஒதுக்கி வைத்துவிட்டு மக்களுக்காக ஒன்றிணைய வேண்டிய பொறுப்பு உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இன்று நாட்டில் அவ்வாறானதொரு சூழல் காணப்படுவதாகவும் எனவே பிரித்து விமர்சிப்பதை விட அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து மக்களுக்காக செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடியில் இருந்து நாட்டை யாராலும் கட்டியெழுப்ப முடியாது என்றும், நெருக்கடியிலிருந்து நாடு விடுபட்ட பின்னர் கட்சிகளாக பிரிந்து அரசியல் செய்யலாம் என்றும் கூறினார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையை வழிபட்டு வெளியே வந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here