மரம் முறிந்துவிழுந்ததில், வீதியில் பயணித்த ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்பாட்டத்தினால் வீதியின் போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டது.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான, 35 வயதுடைய தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் மகேஸ்வரன் என்ற ஆசிரியரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.