தினேஷ் ஷாப்டரின் மரணம் குறித்து விசாரணை செய்ய விசேட மருத்துவ குழு

0
165

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக ஐவர் அடங்கிய விசேட வைத்திய சபையொன்று அடுத்த வாரம் நியமிக்கப்படும் என கொழும்பு மேலதிக நீதவான் திருமதி ரஜீந்திர ஜயசூரிய இன்று (22) அறிவித்தார்.

ஐவர் கொண்ட இந்த விசேட வைத்திய சபைக்கான விசேட வைத்தியர்களின் பட்டியல் சுகாதார பணிப்பாளர் நாயகம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரினால் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நீதவான் தெரிவித்தார்.

இதன்படி, மூப்பு அடிப்படையில் இந்த நிபுணர் மருத்துவ குழு அடுத்த வாரம் நியமிக்கப்படும் என நீதவான் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று (22) நீதிமன்றில் மீண்டும் அழைக்கப்பட்ட போதே இந்த விடயங்கள் முன்வைக்கப்பட்டன.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here