இரகசிய பொலிஸ் பிரிவின் முன்னாள் தலைவர் ஷானி அபேசேகரவிற்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்குவது தொடர்பான முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
தனது பாதுகாப்பை அதிகரிக்குமாறு கோரி குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி ஷானி அபேசேகர தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த ரிட் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் ஷானி அபேசேகர, தமக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு போதுமானதாக இல்லையெனத் தெரிவித்து தனது பாதுகாப்பை அதிகரிக்குமாறு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய ஆஜராகியிருந்தார். சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலும் ஜனாதிபதியின் சட்டத்தரணியுமான ரொஹந்த அபேசூரிய ஆஜராகியிருந்தார்.