தேர்தல் திகதியை தேர்தல் ஆணைக்குழு சட்டப்பூர்வமாக முடிவு செய்யவில்லை!

Date:

தேர்தலை நடத்துவதற்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு இன்னும் சட்ட ரீதியாக தீர்மானிக்கவில்லை எனவும் தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

“தேர்தல் ஒத்திவைக்கப்படவில்லை, ஒத்திவைக்க எந்த தேர்தலும் இல்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்று (பிப்ரவரி 23) பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கே முன்னுரிமை அளிக்கிறேன். பொருளாதாரத்திற்கு முன்னுரிமை கொடுக்காவிடின் நாடு எஞ்சியிருக்காது.

நாட்டைப் பாதுகாத்தால் மாத்திரமே அரசியலமைப்பின் ஏற்பாடுகளை உறுதிப்படுத்த முடியும். தேசம் இல்லாமல் அரசியலமைப்பை பாதுகாக்க முடியாது. ஜனாதிபதியின் முதல் கடமை தேசத்தைப் பாதுகாப்பதும், பின்னர் அரசியலமைப்பைப் பாதுகாப்பதும் ஆகும்.

மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களுக்கு அமைய புதிய ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இரண்டு வாரங்களுக்குள் சபையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எம்பிக்களுக்கான மேலும் ஒரு சலுகை ரத்து

பாராளுமன்ற உறுப்பினர்களால் “வியத்புர” வீட்டுத்திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்பட்டுள்ள...

அச்சத்தில் கோயில் கோயிலாக செல்லும் அரசியல்வாதிகள்!

தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள உலக எதிர்ப்பு நடவடிக்கையின் போது...

31 கோடி பெறுமதி போதை பொருட்கள் மீட்பு

சீதுவ பகுதியில் உள்ள ஒரு தனியார் அஞ்சல் சேவை நிலையத்தில் சுங்க...

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில், ஒரு வணிக இடத்தில் இருந்த இளைஞனை...