இந்த வாரம் நாட்டையே உலுக்கிய செய்தி இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு ஆகும். இது தொடர்பாக பல கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதில், நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன அதிகம் விமர்சிக்கப்பட்டார்.
இவர் இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநராக கடமையாற்றிய வேளையில் நிதியமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டமையால் அவருக்கும் இந்த சம்பள அதிகரிப்பு கிடைத்தமையே இதற்குக் காரணம்.
1992 ஆம் ஆண்டு, மகிந்த சிறிவர்தன, தான் நிர்வாக சேவையில் சேரவில்லை என்றும், மத்திய வங்கியின் சம்பளம் அதிகம் என்பதாலேயே அதில் இணைந்ததாக ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், அரசியல் பிரதிநிதிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் பல தரப்பினரால் சுற்றிவளைக்கப்பட்டு தாக்கப்படும் சூழ்நிலையில், இறுதியாக நிதியமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து விலகத் தீர்மானித்த அவர், தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நேற்று அனுப்பியுள்ளார்.
அங்கு ஜனாதிபதி அவரை அழைத்து கலந்துரையாடினார். “இந்த விமர்சனம் பற்றி எனக்குத் தெரியும், இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் யாருக்காகவும் அல்ல, நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் பாடுபடுகிறீர்கள். எனவே இந்த ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற வேண்டும். இதனை நான் நிராகரிக்கிறேன்” என ஜனாதிபதி தெரிவித்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.