சாந்தனை இலங்கைக்கு அனுப்ப இந்தியா அனுமதி

0
73

இந்தியாவின் முன்னாள் தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலையான சாந்தன், இலங்கைக்கு வர இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை பெற்ற இலங்கையைச் சேர்ந்த சாந்தன், திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கை, கால், காதுகளில் ஏற்பட்ட கடும் வலி காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவருக்கு நோய் தீவிரம் அடைந்ததால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் தண்டனை பெற்று விடுதலையான தன்னை சொந்த நாடான இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என இந்திய அரசிடம் அவர் கோரிக்கை வைத்து வந்தார். பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும், சாந்தனுக்கு ஆதரவு தெரிவித்து கோரிக்கை முன் வைத்திருந்தனர்.

முன்னதாக இலங்கை அரசும் சாந்தன் இலங்கைக்கு வர அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் திருச்சி இலங்கைத் தமிழர் மறு வாழ்வு முகாமிலுள்ள சாந்தனை சொந்த நாட்டுக்கு அனுப்புவதற்கான அனுமதிக் கடிதத்தை மத்திய அரசு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாருக்கு அனுப்பியுள்ளது.

மத்திய அரசின் உத்தரவு நகல் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், இன்னும் இரண்டு நாட்களுக்குள் சாந்தன் இலங்கைக்கு அனுப்பப்படுவார், விமான பயணச்சீட்டை சாந்தனே முன்பதிவு செய்யலாம் என என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here