இந்திய மீனவர்களுக்கு 10 வருடங்கள் சிறைத் தண்டனை!

Date:

எல்லை தாண்டி வரும் இந்திய இழுவைமடிப் படகுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் வடபகுதி கடற்றொழிலாளர்களும், கடற்றொழில் சங்கங்களும், கடற்றொழிழில் சமாசங்களும் உறுதியாக இருக்கின்றோம்.

மீண்டும் மீண்டும் எல்லை தாண்டி வருபவர்களுக்கு ஐந்து அல்லது பத்து வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என யாழ்ப்பாணம் மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:

யாழ். இந்தியத் துணைத் தூதரகம் முன்பு அண்மையில் போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தோம். அந்தப் போராட்டத்தில் எமது நிலைப்பாட்டை தெட்டத்தெளிவாக வெளிப்படுத்தினோம். அத்துடன் இந்திய இழுவைமடிப் படகுகள் அத்துமீறி எல்லை தாண்டி வருகின்ற செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதை இந்தியத் துணைத் தூதுவரிடம் நேரடியாக வலியுறுத்திக் கூறியிருக்கின்றோம்.

இராமேஸ்வரத்தில் இந்திய மீனவர்கள் நியாயமற்ற போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். எமது கடல் எல்லைக்குள் வந்து நமது வளங்களைக் களவாடிச் செல்கின்றவர்கள், இன்று நியாயமான போராட்டம் என்ற பேரிலே தமது களவுத் தொழிலையும், அத்துமீறிய அநியாயமான தொழிலையும் நிலை நிறுத்துவதற்காகவும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இதற்கு தமிழக அரசும் உடந்தையாக இருந்து ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கின்றது.. இந்த நிலையை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்நிலை தொடருமானால் எமது வடபகுதி கடற்றொழிழிலாளர்களுடைய வாழ்வாதாரம் முற்றாக அழிக்கப்பட்டு நாங்கள் வறுமையில் சாக வேண்டிய ஒரு நிலை ஏற்படும்.

நாங்கள் பேசாமல் இருக்கும் வரை அவர்கள் எமது கடற் பகுதியை ஆக்கிரமித்து விடுவார்கள். அந்த வகையிலே இன்று ஒரு நிகழ்வு இந்தியா பகுதியில் போய்க்கொண்டிருக்கிறது. இந்திய தரப்பிலே ஒரு கருத்து வருகின்றது. தமிழக அரசும் அந்தப் பகுதியிலேயே இருக்கின்ற மீன்வளத்துறை அமைச்சும், அத்துமறி வருகின்ற மீனவர்களுடைய செயற்பாடு விடயமாக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று.

நாங்கள் பல தடவை எமது அரசாங்கத்துக்கும் இந்திய அரசாங்கத்தக்கும் கோரிக்கைகள் விடுத்திருக்கின்றோம். கடிதங்கள் அனுப்பி இருக்கின்றோம். எச்சரிக்கைகள் விடுத்திருக்கின்றோம். ஆனால், எதற்குமே யாரும் மசிந்ததில்லை. இன்னும் இந்திய அரசாங்கம் தங்களுடைய அத்துமீறிய தொழிலை முடுக்கி விடுவது போல தான் எங்களுக்குத் தெரிகின்றது.

அந்த வகையிலே இங்கே எமது கடற்பரப்பிலே களவாட வந்தவர்களைக் கைது செய்தது குற்றம், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். எக்காரணம் கொண்டும் அவர்கள் விடுதலை செய்யப்படக்கூடாது. அவர்கள் சட்டப்படி தான் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

எமது நாடு ஒரு இறைமையுள்ள நாடு. எமது இறைமையையும் சுதந்திரத்தையும் யாரும் பறித்தெடுக்க முடியாது. அந்த வகையிலே அத்துமீறி வந்து எமது வளங்களைக் களவாடியவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை சரியானது.

ஆனால், அந்தத் தண்டனை போதாது. தற்போது ஒருவருடம் தண்டனை வழங்கப்பட்டவர்கள் மீண்டும் மீண்டும் வருவார்களானால் அவர்களுக்கு ஐந்து வருடங்கள் அல்லது 10 வருடங்களாவது சிறைத் தண்டனை வழங்கினால் தான் அவர்கள் ஒரு நிலைப்பாட்டிற்கு வருவார்கள் என்பதை நான் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றேன் – என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...