சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சை மறுசீரமைக்கும் வகையில் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய முன்னுரிமைத் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவித்தல், நிறுவனங்கள் மற்றும் சட்டக் கட்டமைப்புகளை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது.