நாடளாவிய ரீதியில் நிலவும் மின்வெட்டு காரணமாக நீர் விநியோகம் தடைபடும் என நீர்வழங்கல் வடிகாலமைப்பு சங்கத்தின் இணைச் செயலாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு நீர் விநியோகம் செய்யும் அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மின்வெட்டினால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நாட்டின் ஏனைய பகுதிகளில் நீர் வழங்கல் செயல்முறை நேரடியாக தேசிய கட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், உள்ளூர் நீர் விநியோகத்தில் அழுத்தம் குறைவாக இருக்கலாம் என அவர் மேலும் கூறினார்.