ஞாயிறு தாக்குதல் விசாரணை குறித்து ரணில் வெளியிட்டுள்ள சந்தேகம்

0
110

ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை தொடர்பில் பாரிய கேள்வி எழுந்துள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (25) விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலுக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவினருடன் தொடர்பு இருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர தெரிவித்திருப்பதைக் கருத்தில் கொண்டு, மேலதிக விசாரணைகளுக்கு நம்பகமான மற்றும் பக்கச்சார்பற்ற குழுவொன்று தேவை என்பது தெளிவாகத் தெரிவதாக முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.

“இறுதியாக ஷானி அபேசேகரவின் வாக்குமூலம் உள்ளது. இந்தத் தாக்குதலுக்கும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கும் தொடர்பு இருப்பதாக ஷானி அபேசேகர கூறுகிறார். அவர்களை ஏன் கைது செய்தீர்கள்? ஏன் அவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும்? இந்த அம்பலப்படுத்தல்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லையா? இந்த விடயங்களை கருத்தில் கொண்டு அனைவரும் பக்கச்சார்பற்ற ஒரு குழுவை நியமிக்க வேண்டும்” என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here