இந்தியன் ஒயில் நிறுவனம் டீசல் விலையை அதிகரித்த போதிலும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் டீசல் மற்றும் பெற்றோலின் விலையை அதிகரிக்காது என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று இரவு இந்தியன் ஒயில் நிறுவனம் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையை ரூ. 20 மற்றும் அனைத்து வகை டீசல் விலை ரூ. 15 ஆக உயர்த்தியுள்ளது.
இதன்படி, இந்தியன் ஒயிலின் 92 ஒக்டேன் பெற்றோலின் லீற்றர் ஒன்றின் விலை 204 ரூபாவாகவும், டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 139 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் ஒயில் நிறுவனம் கடந்த 6ம் திகதி எரிபொருள் விலையை உயர்த்தியது.
எரிபொருட்களின் விலையை அதிகரிக்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அமைச்சிடம் கோரிக்கை விடுத்த போதிலும் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.