அரசு நிறுவனங்களில் டிஜிட்டல் கட்டண அமைப்பு அடுத்தாண்டுமுதல் அமுல்!

Date:

அரச நிறுவனங்களின் அனைத்து கொடுப்பனவுகளும் கட்டணங்களும் அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் டிஜிட்டல் இலத்திரனியல் கொடுப்பனவு வசதிகளின் கீழ் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.

இது தொடர்பான தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் இந்த ஆண்டு செப்டம்பரில் அரச நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்றும், நாட்டின் டிஜிட்டல் மாற்றத்திற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், இணையப் பாதுகாப்புச் சட்டம் இந்த ஆண்டுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும், இந்தச் சட்டம் தேசிய தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பு மூலோபாயத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன் மூலம் தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்கவும், சிலரால் டிஜிட்டல் முறைகளைத் தவறாகப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தவும், முக்கியமான டிஜிட்டல் உள்கட்டமைப்பைப் பாதுகாக்கவும் முடியும் என்றும் கூறினார்.

இலங்கையின் புதிய இணையப் பாதுகாப்பு மூலோபாயத் திட்டம் தொடர்பாக இலங்கை கணினி அவசர பதில் மன்றமும் உலக வங்கியும் இணைந்து கொழும்பில் நடத்திய செயலமர்வில் கலந்துகொண்ட போதே இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் மேற்கண்டவாறு கூறினார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது?

இந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது செய்யப்படுவார்கள்...

திகதி மாற்றம் செய்த ஐதேக

எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு...

ஆகஸ்ட் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரிப்பு

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டிற்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4...

UNP – SJB ஐக்கியம்!

ஐக்கிய தேசியக் கட்சியினால் உறுப்புரிமை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள, தற்போது ஐக்கிய மக்கள்...