எரிபொருள் விலை குறைகிறது

0
119
Johannesburg, 01-10-18 A petrol attendant fills up a car at a BP service station before South Africans face another national fuel hike. Picture: Karen Sandison/African News Agency(ANA)

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு எதிர்காலத்தில் நிவாரணம் வழங்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தெரண 360 நிகழ்ச்சியில் இணைந்து கொண்ட அமைச்சர், விலைச்சூத்திரத்தில் அரசாங்கத்திற்கு கிடைக்கும் 4% ஈவுத்தொகையை குறைத்து அந்த நிவாரணத்தை மக்களுக்கு வழங்குவதாக தெரிவித்தார்.

“.. பூஜ்ஜியத்திலிருந்து 4% வரை ஈவுத்தொகையைக் குறைப்பதன் மூலம் செலவுகளை மட்டுமே ஈடுசெய்யும் வகையில் விலை சூத்திரத்தை செயல்படுத்த நாங்கள் எண்ணியுள்ளோம்.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், பிற LIOCகள் மற்றும் சினோபெக் ஆகியவற்றுடன் போட்டியிட அந்த 4% ஐப் பயன்படுத்த முயற்சிக்கிறோம்.

இத்தனை நாள் எல்லாம் 4% வைத்திருந்தோம், கடந்த ஆண்டு விலைச்சூத்திரத்தை அமுல்படுத்தியதால் பழைய கடனையும், வங்கிகளில் வாங்கிய கடனையும் ஈடுகட்ட முடிந்தது.

இதன் பயனை மக்களுக்கு வழங்குவதற்காக எதிர்காலத்தில் துரிதமாக செயற்படுவோம் என நம்புகின்றோம்.

இப்போது அமைச்சகத்திடம் இருந்து அதிகபட்ச சில்லறை விலையை வர்த்தமானியில் வெளியிடுகிறோம். பின்னர் CPC மற்றும் LIOC பெரும்பாலும் அந்த அதிகபட்ச விலைக்கு செல்லும்.

சினோபெக் மட்டும் அதை விட குறைவாக விற்கிறது. இந்த அல்லது அடுத்த விலைச் சுழற்சியில், CPC அதிகபட்ச விலையைக் கொண்டிருக்கும்போது, ​​குறைந்த விலையில் போட்டியிட அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here