ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை நியமிக்க வேண்டும் என கட்சியின் மாத்தளை மாவட்ட பிரதிநிதிகள் கூட்டத்தில் தீர்மானம் முன்வைக்கப்பட்டது.
நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்ற பிரேரணைக்கு அனைத்து உள்ளுராட்சி பிரதிநிதிகளும் ஏகமனதாக ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரியவருகிறது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உருவத்தை பயன்படுத்துவதன் மூலம் எதிர்வரும் தேர்தலில் கணிசமான ஆதாயங்களை பெற்றுக்கொள்ள முடியும் என அங்கு கூடியிருந்த பெரும்பாலானோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.