சுமந்திரன் எம்.பியின் தாயார் கொழும்பில் காலமானார்!

0
166

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் தாயார் புஷ்பராணி மதியாபரணன் (வயது 85) இன்று மதியம் 1:30 மணியளவில் கொழும்பு – தெகிவளையில் தனது மகளின் இல்லத்தில் காலமானார்.

முதுகுத் தண்டு சத்திர சிகிச்சையின் பின்னர் கடந்த இரண்டு வருட காலமாகப் படுக்கையில் இருந்த அவர், இன்று பிற்பகல் உலகை விட்டுப் பிரிந்தார்.

அவரது இறுதிச் சடங்கு பெரும்பாலும் நாளைமறுதினம் வியாழக்கிழமை கொழும்பில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமது கணவர், ஒரே மகள் மற்றும் ஒரே மகனையும் அவர்களது குடும்பத்தவர்களையும் விட்டு அவர் பிரிந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here