இலங்கைக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை, இந்தியா அணிகள் மோதும் இரண்டாவது டி20 ஆட்டம் இமாச்சலப் பிரதேசம் தரம்சாலாவில் நேற்று நடைபெற்றது.
போட்டிக்கு முன்னதாக நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ஓட்டங்கள் எடுத்தது. இதில், அதிகபட்சமாக நிசாங்கா அரைசதம் கடந்து அசத்தினார். இருப்பினும் அவர் 75 ஓட்டங்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.ஷனாகா 47 ஓட்டங்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனையடுத்து,இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ,ரோஹித் சர்மா இஷான் கிஷன் களமிறங்கிய நிலையில்,வந்த வேகத்திலேயே 1 ஓட்டம் மட்டும் எடுத்து ரோஹித் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து 16 ஓட்டங்கள் மட்டும் எடுத்து இஷான் வெளியே ,அடுத்து களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் 6 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 74 ஓட்டங்கள் எடுத்து அணிக்கு ரன்களை குவித்தார். இதனிடையே நிதானமாக விளையாடிய சஞ்சு சாம்சன் 39 ஓட்டங்களுடன் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதன்பின்னர்,ரவீந்திர ஜடேஜா 45 ஓட்டங்கள் எடுத்து விக்கெட் இழக்காமல் இருந்தார்.இறுதியில் இந்திய அணி 17.1 ஓவர் முடிவிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 186 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை கைப்பற்றியது. இதனால்,இலங்கை அணியை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து,இரு அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 3 வது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.