“சிலுவையில் அடித்து சத்தியம் செய்கிறேன். சத்தியமாக எனக்கு தகவல் தெரியாது!” – மைத்திரி

0
277

உயிர்த்த ஞாயிறு அன்று தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் என தகவல் கிடைத்த போதிலும், மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றதாக கூறப்படும் குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.
புலனாய்வுப் பிரிவினரோ அல்லது பாதுகாப்புப் பிரிவினரோ இவ்வாறான தகவல்களை தமக்கு அறிவித்திருந்தால் எக்காரணம் கொண்டும் நாட்டை விட்டு வெளியேறியிருக்க மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி கூறுகிறார்.

பொலன்னறுவை நிர்மலி தேவாலயத்தில் நடைபெற்ற ஞாயிற்றுக்கிழமை ஆராதனையில் கலந்து கொண்டு உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன, சிங்கப்பூரில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் வேளையில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தனக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.

இது தொடர்பாக சிலுவையில் கை வைத்து சத்தியம் செய்யலாம் என்றும் கூறுகிறார்.

தாம் சிங்கப்பூரில் இருக்கும் போது, ​​தாக்குதலக்கு நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டதும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறும், உரிய நடவடிக்கை எடுக்குமாறும் பாதுகாப்புப் பிரிவினருக்கு அறிவுறுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here