எரிபொருள் நெருக்கடியை கவனத்தில் கொண்டு வாரத்தில் வேலைநாட்களை நான்கு தினங்களாக குறைத்து வேலைசெய்வதற்கும், மணித்தியாலத்தை அதிகரிப்பதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி ஆளுநரினால் அரசாங்கத்திற்கு குறித்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வேலை நேரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்களிலிருந்து வேலைசெய்யும் பணியாளர் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தமது பணிகளை மேற்கொண்டு நேரகாலத்தோடு வீடுகளுக்குச் செல்ல சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் மத்திய வங்கி குறித்த யோசனையில் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் தனியார் வாகன பாவனையினை குறைத்து பொது போக்குவரத்துக்களை முடிந்தளவு பயன்படுத்துமாறும் மத்திய வங்கி கேட்டுக்கொண்டுள்ளது