பிரதமர் பதவிக்கு மஹிந்த ஆசைப்படவில்லை!

Date:

“முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராகத் தொடர்ந்தும் செயற்படுகின்றார். அவர் மீண்டும் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்க விரும்பவில்லை.”

– இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் இன்று அவர் மேலும் கூறுகையில்,

“பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பில் மொட்டுக் கட்சிக்குள் எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை. தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்த்தன சிறப்பாக செயற்பட்டு வருகின்றார்.

கட்சியைக் காட்டிக்கொடுத்துவிட்டு, அரசியல் ரீதியில் வங்குரோத்தடைந்துள்ள சன்ன ஜயசுமனவே, இப்படியொரு கருத்தை சமூகமயப்படுத்தினார். அதில் எவ்வித உண்மையும் இல்லை.

மஹிந்தவைப் பிரதமராக்க வேண்டுமென்றால் அதனை மக்கள் செய்வார்கள். கட்சிக்குள் அவருக்கு ஆதரவாளர்களும் உள்ளனர். எனினும், பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவது சம்பந்தமாக  எவ்வித கலந்துரையாடலும் கட்சிக்குள் இடம்பெறவில்லை. தற்போதைய பிரதமருடன் எமக்கு சிறந்த நல்லுறவு உள்ளது” – என்றார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரகித, சரித் இருவரும் ஜூலை 3ம் திகதி வரை விளக்கமறியலில்

பாதாள உலக தலைவன் "ஹரக் கடாவிற்கு" வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, அவரது...

கொழும்பில் இரு முக்கிய புள்ளிகள் கைது

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ மற்றும்...

வெனிசுவேலா நிலநடுக்கம் – பலர் பலி

வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸில் சில வினாடிகள் இடைவெளியில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள்...

அஸ்வெசும நலத்திட்டத்தில் மாற்றம்

இனி வரும் காலங்களில் அஸ்வெசும நலத்திட்டத்தின் மூலமான உதவித்தொகை, ஏழை மற்றும்...