உலக சாதனை புரிந்த திருமலை இந்துவின் மைந்தனுக்கு ஆளுநர் வாழ்த்து

0
187

32 KM பாக்கு நீரிணையை இன்று (01.03.2024) நீந்தி கடந்து உலக சாதனை நிகழ்த்தி தி/இ.கி.ச.ஶ்ரீ. கோணேஸ்வரா இந்துக்கல்லூரிக்கு பெருமை சேர்த்தார் 13 வயதான ஹரிஹரன் தன்வந்த்.

இந்நிலையில் பாக்குநீரினையை நீந்திக் கடந்து, திருகோணமலையை சேர்ந்த 13 வயது சிறுவனான தன்வந்த் சாதனைக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தனுஸ்கோடியிலிருந்து ஆரம்பித்த சாதனைப் பயணம் தலைமன்னாரை வந்து அடைந்தது. சுமார் 31.05 கிலோமீற்றர் தூரத்தை எட்டு மணி, 15 நிமிடத்தில் குறித்த சாதனையினை தன்வந்த் படைத்துள்ளார்.

இச்சாதனையை படைத்து கிழக்கு மாகாணத்திற்கு இச்சிறுவன் பெருமை சேர்த்துள்ளார்.இச்சிறுவன் மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here