சாந்தனின் உடல் உறவினர்களிடம் கையளிப்பு!

0
58

உடல்நல பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தன் என அழைக்கப்படும் சுதேந்திர ராசாவின் சடலம் இன்று நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவரது சடலம், இன்று முற்பகல் 11.35க்கு ஸ்ரீPலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 122 என்ற விமானம் ஊடாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்டு அவரது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாந்தனின் உடல் கொழும்பில் உள்ள மலர்ச்சாலையொன்றுக்கு கொண்டுவரப்பட்டு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னர் யாழ்ப்பாணத்துக்கு எடுத்துச் செல்லப்படும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புடைய சாந்தன் சென்னையில் நேற்று முன்தினம் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here